சிகாகோவைச் சேர்ந்த ஸ்டேசி பின்சஸ் என்பவர் கடந்த வாரம் கடந்த இந்த வழக்கைத் தொடுத்துள்ளார்.
இந்த வழக்கு குறித்து ஸ்டார்பக்ஸ் தரப்பில், “அற்பத்தனமாகவும், முறையற்ற வகையிலும்” இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
“எந்த ஒரு குளிர்பானமாக இருந்தாலும், எங்களது வாடிக்கையாளர்கள் ஐஎஸ் என்பதை மிகவும் தேவையான ஒன்றாகக் கருதுவதாக நாங்கள் நம்புகின்றோம். ஒருவேளை அந்த வாடிக்கையாளருக்கு நாங்கள் தயாரித்த பானத்தில் திருப்தி இல்லையென்றால், நாங்கள் மகிழ்ச்சியோடு அதை மீண்டும் அவர் விருப்பப்படி தயாரித்துத் தர தயாராக இருக்கின்றோம்” என்று ஸ்டார்பக்ஸ் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது இந்த விவகாரம் நட்பு ஊடகங்களின் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
“அமெரிக்கா தங்களை வரவேற்கிறது. அற்பமான வழக்குகளுக்குச் சொந்தமான நாடு” என்று நியூயார்க் தொலைக்காட்சியைச் சேர்ந்த புகழ்பெற்ற தொகுப்பாளர் ராப் ஸ்மிட் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.