Home நாடு சிவப்புப் பேரணி: செல்லியல் ஒரு வரிச் செய்திகள் (தொகுப்பு 5)

சிவப்புப் பேரணி: செல்லியல் ஒரு வரிச் செய்திகள் (தொகுப்பு 5)

533
0
SHARE
Ad

Red shirt-rally-16 sept 2015

  • சிவப்புப் பேரணியில் செய்தி சேகரித்த பத்திரிக்கையாளர்களை நோக்கி பங்கேற்பாளர்கள் தகாத வார்த்தைகளால் ஏசினர்.
  • ஆர்ப்பாட்டக்காரர்கள் அருகில் செல்ல வேண்டாம் – எதிர் சாலையில் நில்லுங்கள் என பத்திரிக்கையாளர்களுக்கு கலகத் தடுப்பு காவல் துறையினர் அறிவுறுத்தல்!
  • பேரணியில் கலந்து கொண்ட சிலாங்கூர் அம்னோ தலைவரும் முன்னாள் அமைச்சருமான, டத்தோ நோ ஓமார், ஆயிரக்கணக்கில் கூட்டம் திரட்டுவதென்றால் அது எங்களாலும் முடியும் என பேரணியினரிடையே ஆற்றிய உரையில் முழக்கம்
  • கூட்டத்தினரிடையே இருக்கும் சில ‘துரோகக் கும்பல்கள்தான்’ காவல் துறையினரை நோக்கி பிளாஸ்டிக் குடுவைகளை வீசினர் என்றும், தொடர்ந்து அவ்வாறு வீச வேண்டாம் என்று சில பங்கேற்பாளர்கள் சத்தமாகக் கூவினர்
  • பெட்டாலிங் சாலையில் கலவரத்தைத் தூண்டி விட்டவர்கள் அச்செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் சிவப்புப் பேரணி ஏற்பாட்டுக் குழுத் தலைவரும், முன்னாள் மலாக்கா மாநில முதல்வருமான அலி ருஸ்தாம் அறிவிப்பு.
  • சிவப்புப் பேரணி பங்கேற்பாளர்களுக்கு பிரதமர் நஜிப் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார் என்றும், பேரணியின் வெற்றி குறித்து அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்தார் என்றும் முன்னாள் அமைச்சர் அனுவார் மூசா தனது உரையில் அறிவிப்பு.
  • பெட்டாலிங் வணிகர்களைப் பாதுகாப்போம் என அறிவித்த ‘ஓதாய் ரிபோமார்சி’ (Otai Reformasi) குழுவினர் காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி பெட்டாலிங் சாலையின் உட்புறத்தில் கூடியிருந்தனர்
  • பெட்டாலிங் சாலையில் எங்களை நுழைய விடாமல் தடுத்த காவல் துறையினர் அதற்காக இலஞ்சம் பெற்றுள்ளனர் என பங்கேற்பாளர்கள் உரத்த குரலில் குற்றச்சாட்டு
  • பெட்டாலிங் சாலை கலவரத்திற்கு பக்காத்தான் கட்சியினர்தான் காரணம் என மலாய்-முஸ்லீம் அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஜாமில் சுலோங் குற்றச்சாட்டு!
  • சிவப்புப் பேரணி அமைதியாக நடந்தேறியதற்கு பிரதமர் நஜிப் தனது டுவிட்டர் அகப் பக்கத்தில் பாராட்டு தெரிவித்ததுடன், பெட்டாலிங் சாலை கலவரத்தை விசாரிக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை
  • பெட்டாலிங் சாலை நுழைவாயிலில் கலகத் தடுப்பு காவல் துறையினருடன் சிவப்புப் பேரணியினர் நடத்திய மோதலில், மூன்று காவல் துறையினருக்கு காயங்கள்!
  • 24 வயது 30 வயது கொண்ட இருவர் பெட்டாலிங் சாலை கலவரத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் தாஜூடின் முகமட் இசா அறிவிப்பு
  • பெட்டாலிங் சாலை கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நாங்கள் உதவ மாட்டோம் – கலவரக்காரர்களுக்கு ஆதரவளிக்க மாட்டோம் என ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அனுவார் மூசா அறிவிப்பு
  • புதன்கிழமை இரவுடன் சிவப்புப் பேரணி ஒரு முடிவுக்கு வந்து கோலாலம்பூர் வழக்கமான நிலைமைக்குத் திரும்பியது