Home Featured நாடு ஜமால் யூனுசும் கைது!

ஜமால் யூனுசும் கைது!

722
0
SHARE
Ad

Dato Jamal Yunus

ஷா ஆலாம் – பெர்சே இயக்கத்திற்கு எதிராக சிவப்பு சட்டை அணியை உருவாக்கிப் போராட்டம் நடத்தி வரும் சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் யூனுஸ் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஷா ஆலாமிலுள்ள சிலாங்கூர் மாநிலக் காவல் துறையின் தலைமை நிலையத்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

பெர்சே மற்றும் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த பலர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.