Home Featured நாடு பெர்சே 5 பேரணியில் பங்கேற்க வேண்டாம் – இந்தியர்களுக்கு சுப்ரா அறிவுரை!

பெர்சே 5 பேரணியில் பங்கேற்க வேண்டாம் – இந்தியர்களுக்கு சுப்ரா அறிவுரை!

543
0
SHARE
Ad

Subramaniam-featureகோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை நடைபெறும் பெர்சே 5 பேரணியில் கலந்து கொள்ள வேண்டாமென இந்திய சமுதாயத்தை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கில் பெர்சே பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் டாக்டர் சுப்ரா தெரிவித்துள்ளார்.

“அவர்கள் தங்களது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்றால், காவல்துறையின் அறிவுரையைக் கேட்க வேண்டும். ஆனால் குழப்ப நிலையை ஏற்படுத்துவதையே அவர்கள் நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர். மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனக் கருதுகின்றேன்”

#TamilSchoolmychoice

“இந்தப் பேரணிக்கு இந்திய சமுதாயம் ஆதரவு தெரிவிக்காது என நான் நம்புகின்றேன். காரணம் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அவர்கள் கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள்.” என்று நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில் பேசுகையில் டாக்டர் சுப்ரா தெரிவித்துள்ளார்.