Home Featured நாடு கைதுகள்; சோதனைகளால் போராட்டம் ஓயாது! பெர்சே சூளுரை!

கைதுகள்; சோதனைகளால் போராட்டம் ஓயாது! பெர்சே சூளுரை!

687
0
SHARE
Ad

bersih-5-banner-twitter

கோலாலம்பூர் – இன்று வெள்ளிக்கிழமை மாலை காவல் துறையினர் மேற்கொண்ட சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளால் தாங்கள் சோர்ந்து விடவில்லை என்றும் மாறாக, முன்பைவிட வீறுகொண்டு கூடுதலான மக்கள் சாலைகளில் திரள்வார்கள் என்றும் பெர்சே ஏற்பாட்டாளர்கள் சூளுரைத்துள்ளனர்.

bersih-5-aims

#TamilSchoolmychoice

நாளை சனிக்கிழமை நடைபெறும் பெர்சே 5.0 பேரணி தொடர்பில் இறுதி நிலவரங்கள் பின்வருமாறு:

  • பல சாலைகள் மூடப்படும் என்றும் மேலும் பல சாலைகள் வழிமாற்றி விடப்படும் என்றும் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
  • மெர்டேக்கா சதுக்கம் காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, அங்கு பொதுமக்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது.
  • பெர்சே பேரணி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு சட்ட உதவி வழங்க வழக்கறிஞர் மன்றத்தின் சார்பில் சுமார் 100 வழக்கறிஞர்கள் தயார் நிலையில் உள்ளனர்.bersih-5-medical-legal-assistance
  • தற்போது  ஒரு மாநாட்டுக்காக சூடானில் இருக்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர், இறுதி நேரத்தில் பெர்சே பேரணியில் கலந்து கொள்ள நாடு திரும்ப முயற்சி செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பெர்சே போன்ற பேரணிகளை நடத்துவதன் மூலம்தான் எங்களால் நஜிப்பை பதவியில் இருந்து விலகச் சொல்லி வற்புறுத்த முடியும், மற்றபடி எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.