இது தொடர்பான அறிக்கைகள், கோலாலம்பூர் தூதரக வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மலேசியக் காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், “அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனினும், தீவிரவாத அச்சறுத்தல்களுக்கு வாய்ப்பில்லை” என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை அறிவிப்பினை ஆஸ்திரேலிய அரசும், தங்களது இணைய தளங்களில் சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.