மணிலா – பிலிப்பைன்சில் செயல்பட்டு வந்த ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவனான மலேசியாவைச் சேர்ந்த டாக்டர் மாஹ்முட் அகமட் கொல்லப்பட்டதையடுத்து, தென் கிழக்கு ஆசியாவில் தீவிரவாத அமைப்பை நிறுவும் ஐஎஸ் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது.
தெற்கு பிலிப்பைன்சில் உள்ள மாராவி நகரில், டாக்டர் மாஹ்முட் சில தினங்களுக்கு முன் கொல்லப்பட்டதாக பிலிப்பைன்சைச் சேர்ந்த டெயிலி இன்கொயரர் இணையதளம் தெரிவித்திருக்கிறது.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் தங்களது அடித்தளத்தை அமைக்க முடியாமல் தோல்வியடைந்ததால், அடுத்ததாக மாராவியில் அவர்கள் தங்களது அமைப்பை நிறுவ முயற்சி செய்தனர். அதற்கு ஐஸ்னிலான் ஹாபிலான் மற்றும் ஓமார் மௌத் ஆகியோரோடு மலேசியாவைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் மாஹ்முட்டும் பேருதவியாக இருந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், தற்போது இம்மூவரையும் பிலிப்பைன்ஸ் இராணுவம் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.