சென்னை – நீண்ட நாளாக இல்லத்திலிருந்தே சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, இன்று வியாழக்கிழமை தனது கோபாலபுரம் இல்லத்திலிருந்து புறப்பட்டு முரசொலி அலுவலகத்தின் நடைபெற்று வரும் முரசொலி பவள விழாக் கண்காட்சியைப் பார்வையிட்டார்.
அவர் முரசொலி அலுவலகத்திற்கு தள்ளுவண்டியில் வருகை தந்த போது, அவரது புதல்வர்கள் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, மகள் செல்வி ஆகியோர் உடனிருந்தனர். துரைமுருகன் உள்ளிட்ட சில முக்கிய திமுக தலைவர்களும் அங்கிருந்தனர்.
பின்னர் கோபாலபுரம் இல்லத்தின் முன் கையைத் தூக்கி கருணாநிதி பத்திரிக்கையாளர்களை நோக்கிக் கையசைத்தார்.
இல்லத்திலேயே முடங்கிக் கிடந்த கருணாநிதி வெளியில் வந்து இன்று முரசொலி அலுவலகம் வந்த நிகழ்ச்சியானது திமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.