Home நாடு கோலாலம்பூருக்கு ஐஎஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் – அமெரிக்கா எச்சரிக்கை!

கோலாலம்பூருக்கு ஐஎஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் – அமெரிக்கா எச்சரிக்கை!

876
0
SHARE
Ad

klகோலாலம்பூர் – ஹரிராயா ஹஜி இஸ்லாம் பண்டிகையை முன்னிட்டு நேற்று மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருக்கும் போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும். அதனால், கோலாலம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயணிக்க வேண்டாம் என அமெரிக்கா, மலேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் தனது குடிமக்களை எச்சரித்து இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பான அறிக்கைகள், கோலாலம்பூர் தூதரக வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது.

இது குறித்து மலேசியக் காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், “அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனினும், தீவிரவாத அச்சறுத்தல்களுக்கு வாய்ப்பில்லை” என்று தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை அறிவிப்பினை ஆஸ்திரேலிய அரசும், தங்களது இணைய தளங்களில் சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.