Home Featured நாடு புகைமூட்டம்: சுபாங் விமான நிலையம் 2 மணி நேரம் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது!

புகைமூட்டம்: சுபாங் விமான நிலையம் 2 மணி நேரம் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது!

754
0
SHARE
Ad

haze-Subang Airport-சுபாங் – கடும் புகைமூட்டம் காரணமாக சுபாங் விமான நிலையத்தில் பல விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை நேற்று ரத்தானது. சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 7.45 மணி வரையில் விமானத்தை இயக்குவதற்கு தேவைப்படும் காணும் தன்மை (பார்வைத் தெளிவு – visibility) இல்லாத காரணத்தால் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும், விமான நிலையம் மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுல்தான் அப்துல் அசிஸ் விமான நிலையம் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மூடப்பட்டதாக ஃபயர் ஃபிளை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி இக்னேசியஸ் தெரிவித்தார்.

“விமான நிலையம் மூடப்பட்டதால் ரத்து செய்யப்பட்ட விமான சேவைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை மறுபட்டியலிடப்படும். ஏனெனில் விமான நிலையம் எப்போது திறக்கும் என எங்களுக்குத் தெரியாது. ஃபயர் ஃபிளை விமானங்கள் சுபாங் விமான நிலையத்தில் இருந்து தினமும் இரவு 10 மணிவரை கிளம்பிச் செல்கின்றன. தற்போது அனைத்து விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன,” என்றார் இக்னேசியஸ்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் புகைமூட்டம் ஓரளவு குறைந்தபடியால் இரவு 7.45 மணி முதல் விமான நிலையம் சகஜநிலைக்குத் திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் விமான சேவைகளுக்கு விமான நிலையம் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மோசமான புகைமூட்டம் காரணமாக ஓடுதளம் வழி விமானம் புறப்படுவதும், தரையிறங்குவதும் பாதிக்கப்பட்டதாக மலேசியா ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் செய்தித் தொடர்பாளர் கூறினார். எனினும் கேஎல்ஐஏ மற்றும் கேஎல்ஐஏ 2 ஆகிய விமான நிலையங்கள் வழக்கம்போல் இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

(படம்: புகைமூட்டத்தால் நேற்று சூழப்பட்ட சுபாங் விமான நிலையம்)