சான் ஜோசே – இந்தியப் பிரதமரான பின்பு இரண்டாம் முறையாக அமெரிக்கா சென்றுள்ள நரேந்திர மோடி, இன்று உலகின் மிக முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இருக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் ஆப்பிள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகளை சந்திப்பார் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த சில நிமிடங்களுக்கு முன்னர், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான டிம் குக், நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
அந்த சந்திப்பின் போது டிம் குக், “இந்தியாவுடன் எங்களுக்கு எப்போதும் தனிப்பட்ட பிணைப்பு உண்டு. எங்கள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் உத்வேகத்திற்காகவே இந்தியா சென்றார்” என்று தெரிவித்துள்ளார்.
இவர்கள் சந்திப்பின் போது, இந்தியாவில் ஆப்பிளின் வர்த்தக தொடர்புகள் குறித்து பேசப்பட்டதாக பிரதமர் வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும், விரைவில் அது தொடர்பான அறிக்கைகள் வெளியாகும்.
-சுரேஷ்