Home Featured இந்தியா குவாங்சோவ் ஓபன் டென்னிஸ் தொடரில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்!

குவாங்சோவ் ஓபன் டென்னிஸ் தொடரில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்!

615
0
SHARE
Ad

sania-hingisகுவாங்சோவ் –  இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சீனாவில் நடைபெற்ற குவாங்சோவ் ஓபன் அனைத்துலக டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

உலகின் முதல் நிலை ஜோடியான சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் இணை, நேற்று நடைபெற்ற குவாங்சோவ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில், சீனாவின் ஷிலின் சு-சியாவ்டி யூ இணையை சந்தித்தது. 58 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில், சானியா ஜோடி, 6-3, 6-1 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த போட்டி தொடரில் சானியா இணை ஒரு செட்டை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதத்தில் ஜோடி சேர்ந்த சானியாவும், ஹிங்கிசும் விம்பிள்டன், அமெரிக்க ஓபன் இரட்டையர் உள்ளிட்ட 6 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனர்.