Home Featured தொழில் நுட்பம் ஒரே மேடையில் மூன்று பிரபல இந்தியர்கள் – மோடி, சுந்தர்பிச்சை, நாதெல்லா சந்திப்பு!

ஒரே மேடையில் மூன்று பிரபல இந்தியர்கள் – மோடி, சுந்தர்பிச்சை, நாதெல்லா சந்திப்பு!

1046
0
SHARE
Ad

pm-in-us1சான் ஜோசே – உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மூன்று இந்தியர்களான நரேந்திர மோடி, கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் தலைவர்களான சுந்தர் பிச்சை மற்றும்  சத்யா நாதெல்லா சந்தித்துத் கொண்ட அபூர்வ நிகழ்வு இன்று சிலிக்கான் பள்ளத்தாக்கில் நடந்துள்ளது.

nadellaஇந்தியாவின் பிரதமராக பதவி ஏற்ற பிறகு இரண்டாம் முறையாக அமெரிக்கா சென்ற நரேந்திர மோடி, ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை மையப்படுத்தி உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு ஆப்பிள் நிர்வாகி டிம் குக்கை சந்தித்த மோடி, தற்போது நாதெல்லாவையும், சுந்தர் பிச்சையையும் சந்தித்துள்ளார்.