Home Featured நாடு புதிய கூட்டணியில் பாஸ் இணையும்: வான் அசிசா நம்பிக்கை

புதிய கூட்டணியில் பாஸ் இணையும்: வான் அசிசா நம்பிக்கை

848
0
SHARE
Ad

Wan-Azizahபெர்மாத்தாங் பாவ்- புதிதாக அமைந்துள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் பாஸ் கட்சியும் இணைந்து செயல்படும் என நம்புவதாக பிகேஆர் தெரிவித்துள்ளது.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் ஏற்கெனவே பிகேஆர் மற்றும் ஜசெக இணைந்துள்ளன. இந்நிலையில் இன்னும் பதிவு செய்யப்படாத அமானா கட்சியும் இதில் இடம்பெற்றுள்ளது.

PAS-Logo-Slider“ஜசெகவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையேயான மோதல் என்பது புதிதல்ல. முந்தைய பக்காத்தான் ரக்யாட் அமைவதற்கும் முன்பே கூட இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது,” என்கிறார் பிகேஆர் தலைவி டத்தோஸ்ரீ வான் அசிசா.
ஜசெக மற்றும் பாஸ் இடையே பிகேஆர் பாலமாகச் செயல்படும் என்று குறிப்பிட்ட அவர், இரு கட்சிகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து இணைந்து செயல்பட முடியும் என்றார்.

“புதிய எதிர்க்கட்சிக் கூட்டணியானது மக்களுக்கு சேவையாற்ற, பொதுக் கொள்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதில் பாஸ் கட்சியும் இணையும் என நம்புகிறோம்.  அடுத்த பொதுத் தேர்தல் தொடர்பிலான தொகுதிப் பங்கீடு குறித்து இப்போதே பேச வேண்டியது இல்லை. அதற்கான நேரம் வரும்போது அது குறித்துப் பேசப்படும்” என்று வான் அசிசா கூறினார்.

#TamilSchoolmychoice

பாஸ் கட்சியில் இருந்து பிரிந்து தலைவர்கள் அமானா என்ற கட்சியை அமைத்திருப்பதால், ஜசெக மற்றும் பாஸ் இடையேயான விரிசல் மேலும் மோசமடையும் என்ற கருத்தை அவர் மறுத்தார்.

இதற்கிடையே அமானா மற்றும் ஜசெகவுடன் எந்த வகையிலும் பாஸ் இணைந்து செயல்படாது என அக்கட்சியின் உதவித் தலைவர் டத்தோ மொகமட் அமர் நிக் அப்துல்லா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.