Home உலகம் சீனாவில் ஐபோனுக்காக நடுவீதியில் நிர்வாணமாக நின்ற இளம் பெண்!

சீனாவில் ஐபோனுக்காக நடுவீதியில் நிர்வாணமாக நின்ற இளம் பெண்!

619
0
SHARE
Ad

1443608899-8247பீஜிங் – சீனாவில் காதலன் ஐபோன் வாங்கித் தர மறுத்ததற்காக மக்கள் நடமாட்டம் உள்ள வணிக வீதியில் ஓர் இளம்பெண் தனது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்றது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவின் நான்ஜிங் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது காதலருடன் கடை வீதிக்குச் சென்றார்.

அங்கே ஒரு கடையில் ஐபோன் எஸ்6 சலுகை விலையில் விற்கப்படும் என்ற விளம்பரத்துடன் முன்பதிவு நடந்து கொண்டிருந்தது.

#TamilSchoolmychoice

அதைப் பார்த்து அந்தப் பெண், தனக்கு ஐபோன் எஸ்6  வாங்கித் தருமாறு தனது காதலரிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர் அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை எனக் கூறி வாங்கித் தர மறுத்துள்ளார்.

வாங்கித் தந்தே ஆக வேண்டும் என்று அந்தப் பெண் அடம் பிடித்துக் காதலனுடன் சண்டை போட்டிருக்கிறார். அப்போதும் காதலன் வாங்கித் தராததால்,கோபம் அதிகமாகி, தான் அணிந்திருந்த ஆடைகளைக் கழட்டி எறிந்துவிட்டு நிர்வாணமாக நின்று போராட்டம் நடத்தியிருக்கிறார்.

அவ்வழியே போனவர்கள் வந்தவர்கள் வாயைப் பிளந்து வேடிக்கை பார்த்தார்களே தவிர, யாரும் அந்தப் பெண்ணைச் சமாதானப்படுத்த முன்வரவில்லை.

கடைசியில் அந்த வழியாகச் சென்ற வயதான பெண்மணி ஒருவர் இதைக் கவனித்து அந்த இளம் பெண்ணைச் சமாதானப்படுத்தி, கீழே கிடந்த ஆடைகளை எடுத்துக் கொடுத்து வற்புறுத்தி அணிந்து கொள்ளச் செய்தார்.

பின்னர் ஒருவழியாகச் சாமாதானம் அடைந்து அந்தப் பெண் உடைகளை அணிந்து கொண்டு காதலனுடன் அங்கிருந்து புறப்பட்டார்.

இச்சம்பவத்தால் அந்தக் கடை வீதி கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாகப் பரபரப்பாய்க் காணப்பட்டது.