இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் மாட்டிறைச்சி விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் கன்னட பெண் எழுத்தாளர் சேத்னா தீர்த்தஹள்ளி பங்கேற்றார். இலக்கிய இதழ்களில் பணியாற்றி வரும் இவர், இந்து மதத்திற்கு எதிரான விமர்சனங்களையும் செய்துவருகிறார்.
இவரின் இந்த நடவடிக்கைகளை கவனித்து வந்த சிலர், தொலைபேசி மூலமாக கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். சமீபத்தில், மதுசூதன் என்பவர் சேத்னாவை பாலியல் பலாத்காரம் செய்து முகத்தில் திராவகம் வீசப்போவதாக பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
ஏற்கனவே எழுத்தாளர்கள் தங்கள் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டதாகக் கூறி சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளை திரும்பக் கொடுத்து வரும் நிலையில், சேத்னாவிற்கு விடுக்கப்பட்ட மிரட்டல் மீண்டும் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.