Home Featured கலையுலகம் மலேசிய கலை உலகம் விருது விழா: 56 விருதுகளுடன் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது!

மலேசிய கலை உலகம் விருது விழா: 56 விருதுகளுடன் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது!

626
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியக் கலைத்துறையில் சிறந்த படைப்பாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்து வரும் மலேசியக் கலை உலகம் நிறுவனம், தனது 2-வது விருது விழாவை 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ம் தேதி பெட்டாலிங் ஜெயா, சிவிக் செண்டரில் வெகு விமர்சையாக நடத்தவிருக்கிறது.

MKU 2

இவ்வாண்டு மலேசியத் தயாரிப்புகளில் திரைப்படங்கள், தொலைக்காட்சிப் படங்கள், குறும்படங்கள், காட்சிகளுடன் கூடிய தனிப்பாடல்கள் ஆகிய பிரிவுகளோடு சேர்த்து, பல சிறப்பு விருதுகளுமாக மொத்தம் 56 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

#TamilSchoolmychoice

2015 ஜனவரி தொடங்கி டிசம்பர் 31 ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட மலேசியத் திரைப்படங்கள், தொலைக்காட்சிப் படங்கள், குறும்படங்கள், காட்சிகளுடன் கூடிய தனிப்பாடல்கள் ஆகியவற்றுக்கு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.

வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க தனியாக நடுவர் குழு அமைக்கப்பட்டு அவர்கள் மூலமே தகுதியான படைப்புகள் தேர்வு செய்யப்படும் என மலேசியக் கலை உலகத்தின் நிறுவனர் எஸ்.பி.சரவணன் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

12107851_1508254396159356_4494052080899839540_n

(எஸ்.பி.சரவணன் மற்றும் கேவிஎம் நிறுவனம் மோகன்)

இந்த ஆண்டு, விருது விழாவிற்கான ஏற்பாடுகளை கே.வி.எம் நிறுவனம் ஏற்று, மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்தவுள்ளது.

இந்த விருது விழாவில் உங்கள் படைப்புகளும் இடம்பெற வேண்டுமா?

2016 ஜனவரி 10-ம் தேதி மாலை 6 மணிக்குள் உங்கள் படைப்புகளையும், அதில் தொடர்புடைய அனைத்துத் தகவல்களையும் mkuawards@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். படைப்புகள் அனைத்தும் மலேசியாவில் தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.