Home Featured தமிழ் நாடு திமுக, அதிமுக- விற்கு மாற்றாக உருவானது ‘மக்கள் நலக் கூட்டியக்கம்’ – வைகோ அதிரடி முடிவு!

திமுக, அதிமுக- விற்கு மாற்றாக உருவானது ‘மக்கள் நலக் கூட்டியக்கம்’ – வைகோ அதிரடி முடிவு!

571
0
SHARE
Ad

vaikoசென்னை – இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் சேர்ந்து மக்கள் நலக் கூட்டியக்கத்தை  உருவாக்கியுள்ளது. இந்த கூட்டியக்கம் மக்கள் நல கூட்டியக்கம் என்ற பெயரில் தேர்தல் கூட்டணியாக செயல்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதன் மூலம் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜகவுடன் எதிர்வரும் தேர்தலில் கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக வைகோ தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், அதிமுக, திமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டியக்கம் செயல்படும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், ஒத்த கருத்துடைய கட்சிகள் மக்கள் நலக் கூட்டணியில் சேரலாம் என்றும் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.