கோலாலம்பூர் – ஓரினப்புணர்ச்சி வழக்கில் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு வழங்கப்பட்டிருக்கும் சிறைத் தண்டனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஐக்கிய நாட்டு நிறுவன மனித உரிமை ஆணையத்தின் கீழ் இயங்கும் குழு ஒன்று அறிவித்துள்ளது.
எனவே உடனடியாக அன்வார் இப்ராகிமை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் அக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
“இந்த விவகாரத்திற்கு உடனடித் தீர்வு என்றால் அது அன்வாரை விடுவிப்பது தான் என்று எங்கள் குழு கருதுகிறது. அதே வேளையில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு அன்வாரிடமிருந்து பறிக்கப்பட்ட அரசியல் உரிமைகளைத் திரும்ப அளிக்கவேண்டும்” என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.
தனது உதவியாளர் சைபுல் புகாரி அஸ்லானை ஓரினப்புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக அன்வார் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த மார்ச் மாதம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.