இதற்காக அன்வார், சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கிய அன்வார் தரப்பு தோல்வியில் முடிந்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனிடையே, நீதிமன்றத்தில் இருந்து அன்வார் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன் தனது நண்பர்களையும், ஆதரவாளர்களையும் நீதிமன்ற வளாகத்தில் அன்வார் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
அப்போது, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவாவைப் பார்த்து கிண்டலாகப் பேசிய அன்வார், “நன்றாக சாப்பிடுங்கள்.. ஏய்… தியான் நான் தான் சிறையில் இருக்கிறேன். உன் அளவுக்கு ஒல்லியாக இல்லை” என்று கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு தியான் சுவா உட்பட அங்கிருந்தவர்கள் சிரித்துள்ளனர்.