Home Featured நாடு காஜாங் சிறுவன் கடத்தல் சம்பவம்: டேக்சி ஓட்டுநருக்கு ஸ்பாட் விருது!

காஜாங் சிறுவன் கடத்தல் சம்பவம்: டேக்சி ஓட்டுநருக்கு ஸ்பாட் விருது!

642
0
SHARE
Ad

kajang-boy-kidnapped-taxi driver-hanizan_காஜாங் – காஜாங் சிறுவன் கடத்தல் சம்பவத்தில், சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த டேக்சி ஓட்டுநர் ஹனிசான் முகமட் ராட்சிக்கு, தரை, பொதுப்போக்குவரத்து ஆணையம் (SPAD) சிறப்பு விருது ஒன்றை வழங்கி கௌரவித்துள்ளது.

டேக்சி ஓட்டுநரின் நேர்மைக்கும், சிறுவனைப் பெற்றோரிடம் ஒப்படைத்த பொறுப்புணர்ச்சியையும் கௌரவிக்கும் வகையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ஸ்பாட் தலைவர் டான்ஸ்ரீ சையட் ஹமீட் அல்பார் இந்த விருதை ஹனிசானுக்கு வழங்கினார். இந்த சிறப்பு விருது ஹனிசானுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

 

Comments