Home Featured நாடு ஜோலோவில் துண்டான தலை ஒன்று கைப்பற்றப்பட்டது!

ஜோலோவில் துண்டான தலை ஒன்று கைப்பற்றப்பட்டது!

604
0
SHARE
Ad

kkmoceanking2கோலாலம்பூர் – தெற்கு பிலிப்பைன்ஸ் காவல்துறை அதிகாரிகள் தற்போது அளித்துள்ள தகவலின் படி ஜோலோ தீவில் நேற்று இரவு நகராட்சி கட்டிடம் அருகே அபு சயாப் அமைப்பால் பிணை பிடித்துச் செல்லப்பட்ட மலேசியர் பெர்னாட் தென்னின் தலை என நம்பப்படும் வெட்டப்பட்ட தலை மீட்கப்பட்டுள்ளது.

வீதிகளை சுத்தம் செய்பவர் ஒருவர் அளித்த தகவலின் படி நேற்று இரவு 8.30 மணியளவில் அங்கு சென்ற காவல்துறை, ‘பெர்னாட் தென் டெட் பென்’ என்று எழுதப்பட்டிருந்த சாக்குப்பையில் இருந்த துண்டான தலையைக் கைப்பற்றியுள்ளனர்.

 

#TamilSchoolmychoice