Home Featured நாடு கைருடின், சாங் மீதான வழக்கு சொஸ்மாவில் சேராது – இருவரும் பிணையில் செல்ல அனுமதி!

கைருடின், சாங் மீதான வழக்கு சொஸ்மாவில் சேராது – இருவரும் பிணையில் செல்ல அனுமதி!

630
0
SHARE
Ad

mattkhai1கோலாலம்பூர் – பொருளாதாரத்தை நாசம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கு, பாதுகாப்புக் குற்றங்களின் பிரிவிலோ அல்லது சொஸ்மாவிலோ சேராது என கோலாலம்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

இந்த முடிவினைத் தொடர்ந்து நீதிபதி மொகமட் அஸ்மான் ஹுசின், கைருடின் அபு ஹசான் மற்றும் மத்தியாஸ் சாங் ஆகியோருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை அமர்வு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார்.

மேலும், அவர்கள் இருவரையும் தலா 10,000 ரிங்கிட் பிணைத்தொகை மற்றும் ஒருவரின் உத்தரவாதத்துடன் விடுவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

#TamilSchoolmychoice