Home One Line P1 துன் மகாதீரின் விசுவாசி அமானாவிலிருந்து வெளியேறினார்!

துன் மகாதீரின் விசுவாசி அமானாவிலிருந்து வெளியேறினார்!

582
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டின் விசுவாசியான கைருடின் அபுஹாசன், “பித்துபிடித்த, நோய்வாய்ப்பட்ட தலைவரின்” கீழ் பணி செய்ய இயலாது என்று கூறி நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

பிகேஆரையும், நம்பிக்கைக் கூட்டணியையும் வழிநடத்த அன்வார் இப்ராகிமை தேர்தெடுத்ததற்கு விமர்சித்து, அவர் திறமையற்ற தலைவர் என்றும், மேலும் மத்திய மட்டத்தில் நம்பிக்கைக் கூட்டணி வீழ்ச்சியடைவதற்கானக் காரணமாக இருந்துள்ளது என்று ஓர் அறிக்கையில் கைருடின் தெரிவித்தார்.

“அன்வார் போன்ற ‘பாசாங்குத்தனமான’ தலைவர்களை ஆதரிக்கவில்லை, வெளிப்படையாக நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேற அனைத்து உயர் பதவியில் உள்ள தலைவர்களுக்கும் நான் அழைக்க விரும்புகிறேன்.

#TamilSchoolmychoice

“அவர் சொகுசாக இருக்கிறார். மேலும் நம்பிக்கைக் கூட்டணியை ஈர்க்கக்கூடிய நிலைக்கு அவரால் கொண்டு செல்ல முடியாது.

“பிகேஆர் கட்சியே சிக்கலில் உள்ளது. அன்வாரின் தலைமையில் வீழ்ந்து விடும்.” என்று கைருடின் கூறினார்.

இதற்கிடையில், அமானா கட்சியிலிருந்து விலகுவதற்கான தனது முடிவையும் கைருடின் அறிவித்து, அது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகக் கூறினார்.

நேற்று திங்கட்கிழமை, நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளப்பட முடிவு செய்யப்பட்டது.

மத்திய அரசாங்கத்தை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளைத் தொடர வாரிசான் கட்சித் தலைவர் ஷாபி அப்டால் உட்பட அனைத்துத் தரப்பினருடனும் தொடர்ந்து கலந்துரையாட அன்வாருக்கு முழு அதிகாரமும் வழங்கப்படுவதாக நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றம் தெரிவித்துள்ளது.

ஷாபியை பிரதமர் வேட்பாளராக நியமிக்கும் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று நேற்று அது வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“மக்கள் ஆணையை மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை என்றும் மன்றம் நம்புகிறது.

“இதுபோன்று, ஆணை திரும்பப் பெறுவதை ஷாபி அப்டால் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் தொடர்ந்து விவாதிக்க தலைவர்கள் மன்றம் அன்வாருக்கு முழு அதிகாரத்தை வழங்கியுள்ளது.” என்று அது மேலும் கூறியது.