ஏதென்ஸ் – கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் உள்ள கிரீஸ் வர்த்தக கூட்டமைப்பு மைய அலுவலகத்திற்கு வெளியே இன்று அதிகாலை குண்டு வெடித்தது.
எனினும், இச்சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்தச் சம்பவத்திற்குக் காரணம், அந்நாட்டின் உள்ளூர் கொரில்லா படை என்றும், அலெக்ஸ் சிப்ராஸ் கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்றதற்குப் பிறகு நடக்கும் முதல் குண்டுவெடிப்பு என்றும் முன்னணி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஹெலனிக் வர்த்தக கூட்டமைப்பு அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே இன்று அந்நாட்டு நேரப்படி 3.30 மணியளவில் குண்டு வெடித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குண்டுவெடிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் மர்ம நபரிடமிருந்து அழைப்பு வந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் தீவிரப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.