அந்த சுயசரிதையில் ஸ்ரீ தேவி பற்றிய அத்தியாயத்தை “ஓர் காதல் கடிதம்” என்று குறிப்பிடுகிறார் ராம் கோபால் வர்மா.
“வானிலிருந்து இறங்கி வந்த தேவதையை சமையலறையில் வேலை செய்ய வைத்துவிட்டார் போனி கபூர் (ஸ்ரீ தேவியின் கணவர்). அவரை எக்காரணத்திற்காகவும் மன்னிக்கவே மாட்டேன். ஏனெனில், போனிகபூரின் வீட்டில் ஸ்ரீதேவி டீ தயாரித்துக்கொண்டிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் ஸ்ரீ தேவி, இதுவரை நான்கு படங்களில் நடித்துள்ளார். 52 வயதான ஸ்ரீதேவியை வர்ணித்து, ராம்கோபால் வர்மா தனது சுயசரிதையில் குறிப்பிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.