Home Featured கலையுலகம் விஜய், அஜித் ரசிகர்களை வைத்து நீயா? நானா? – விஜய் டிவி அரங்கத்திற்குள் அடிதடி!

விஜய், அஜித் ரசிகர்களை வைத்து நீயா? நானா? – விஜய் டிவி அரங்கத்திற்குள் அடிதடி!

684
0
SHARE
Ad

vijayvsajithசென்னை – டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், “விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான நீயா?நானாவில்? அடுத்ததாக விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும், இரு தரப்பு ரசிகர்களும் கீழ்கண்ட எண்ணை  தொடர்பு கொள்ளவும்” என பதிவு ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது.

சமூகம் சார்ந்த பல்வேறு தலைப்புகள் எடுத்து விவாதிக்கப்படும் நீயா? நானாவில்? விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டைக்காக ஒரு நிகழ்ச்சி நடத்தமாட்டார்கள். இது வழக்கம் போல், நட்பு ஊடகங்களில் கிளப்பி விடப்படும் வதந்தி என்று தான் பலரும் நம்பினார்கள். ஆனால், உண்மையாக அப்படி ஒரு தலைப்பு நேற்று இரு தரப்பு ரசிகர்களை அழைத்து விவாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.

இந்த தலைப்பை எடுத்து விவாதிக்கும் அளவிற்கு, இவர்களின் சண்டை சமூகப் பிரச்சனையாகிவிட்டதா? அல்லது இவர்களை வைத்து விஜய் தொலைக்காட்சி நடத்திய வர்த்தக சூதா? என காரசாரமான விவாதங்கள் தற்போது நட்பு ஊடகங்களில் நடைபெற்று வரும் நிலையில், இரு தரப்பு ரசிகர்கள் பொது வெளியில் பகிரங்கமாக மோதிக் கொள்வதை தடுக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ஒரு சாரார் விளக்கம் அளித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

gopinathஆனால், நீயா?நானா? அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இரு தரப்பு ரசிகர்களுக்கும் கைகலப்பு உருவாகும் நிலை ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக சுமார் 15 நிமிடங்களுக்கு நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் இரு தரப்பு ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், விஜய் ரசிகர் ஒருவர், அஜித் ரசிகரைப் பார்த்து கூறிய வார்த்தை ஒன்றுCVEie_EU8AAQrPB இந்திய அளவில் டுவிட்டரில் ‘டிரெண்ட்’ (trend) ஆகும் அளவிற்கு நிலைமை மோசாகி உள்ளது. பிரச்சனை இப்படி இருக்க வரும் ஞாயிற்றுக் கிழமை, அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட இருப்பதால், இப்போதே அதன் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம், உண்மையில் ‘பூனைக்கு மணிக்கட்டும்’ நோக்குடன் விஜய் தொலைகாட்சி இந்த பிரச்சனையை கையில் எடுத்து இருந்தாலும் சரி, அல்லது வர்த்தக நோக்கமாக இருந்தாலும் சரி, இந்த நிகழ்ச்சிக்கான வரவேற்பு, அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.