இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடவும், பாதிக்கப்பட்டவர்கள் தேவையான உதவிகளை பெறவும் முடியும்.
கூகுள் மட்டுமல்லாது டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்கள் மூலமாகவும் தேவையான தகவல்கள் உடனுக்குடன் பெறப்படுகிறது. குறிப்பாக டுவிட்டரில் #ChennaiRainsHelp என்ற டேக்-ஐ கிளிக் செய்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் சென்றடைய ஆயிரம் வழிமுறைகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே வாட்சாப்பில் சென்னை வெள்ளம் குறித்து பல தேவையில்லாத தகவல்களும் பரவுவதாக கூறப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை கருதி அதுபோன்ற தகவல்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.