Home Featured தமிழ் நாடு சென்னைக்கு அடுத்த கட்ட சிக்கல் – 466 பெட்ரோல் நிலையங்கள் மூடல்!

சென்னைக்கு அடுத்த கட்ட சிக்கல் – 466 பெட்ரோல் நிலையங்கள் மூடல்!

462
0
SHARE
Ad

petrolசென்னை – சென்னை பேரிடர் காரணமாக சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் 466 பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதன் மூலம் அரசாலும், தன்னார்வ நிறுவனங்களாலும் செய்யப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் செயலற்று போவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பாதுகாப்பு கருதி, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (Chennai Petroleum Corp Ltd)-ன் மணலி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மிகப் பெரிய அளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.