Home Featured தமிழ் நாடு வண்டலூர் சரணாலயத்தை சுற்றி பாதுகாப்பு அதிகரிப்பு!

வண்டலூர் சரணாலயத்தை சுற்றி பாதுகாப்பு அதிகரிப்பு!

450
0
SHARE
Ad

zoo1சென்னை – சென்னை பேரிடரில் பெரும்பாலான புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வண்டலூர் வன உயிரியல் பூங்காவும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தின் வேகம் காரணமாக, எட்டு இடங்களில், 200 மீட்டர் துாரத்துக்கு சுற்றுச்சுவர் உடைந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், விலங்குகள் வெளியேறி விடக் கூடாது என்பதற்காக அப்பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்பை பன்மடங்கு அதிகப்படுத்தி உள்ளனர்.

vandalurமேலும் பூங்காவிற்கு தொடர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.