Home Featured தமிழ் நாடு சென்னை பேரிடர்: எம்ஜிஆர் இல்லத்தில் 100 மாற்றுத் திறனாளி குழந்தைகள் சிக்கித் தவிப்பு!

சென்னை பேரிடர்: எம்ஜிஆர் இல்லத்தில் 100 மாற்றுத் திறனாளி குழந்தைகள் சிக்கித் தவிப்பு!

548
0
SHARE
Ad

ramapuram mgr schoolசென்னை – மறைந்த எம்ஜிஆர் வசித்த ராமாவரம் இல்லம் வெள்ளக்காட்டில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பதற்காக செயல்பட்டு வந்த அந்த இல்லம் முழுவதும், தற்போது சுமார் 23 அடி அளவிற்கு வெள்ள நீர் சூழந்துள்ளதாக தெரிய வருகிறது.

இதன் காரணமாக அங்கு வாய்பேச முடியாத, காது கேட்க முடியாத குழந்தைகள் சுமார் 100 பேர் உள்ளே சிக்கியுள்ளனர். நேற்றைய தகவல்படி அவர்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. எனினும் தற்போது அவர்களின் நிலை என்ன? குழந்தைகள் மீட்கப்பட்டனரா? என்பது குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.