Home Featured நாடு தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

521
0
SHARE
Ad

Malaysia-Parliament-2---Featureகோலாலம்பூர் – நாடாளுமன்றத்தில் நேற்று தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்மானம் 2015 தாக்கல் செய்யப்பட்டது.

தேசத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடைபெறும் இடங்களை, ‘பாதுகாப்பான பகுதி’ என பிரதமர் அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

காரசாரமான விவாதத்திற்குப் பின்னர், குரல் வாக்குகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

முன்னதாக, இந்தச் சட்டம் அதிகாரத்தை கைப்பற்றும் ஒரு முயற்சி என்றும், அது பிரதமருக்கு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் அதிகாரத்தை வழங்குகிறது என்றும் கூறிய எதிர்கட்சியினரை பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாஹிடன் காசிம் கடிந்து கொண்டார்.

“இந்தச் சட்டம் அவசரநிலையை அறிவிக்கும் சட்டம் கிடையாது, ஆனால் பாதுகாப்பான பகுதி” என்று சாஹிடன் தெரிவித்துள்ளார்.