Home Slider “நான் பலாத்காரம் செய்யல..அது ஒரு விபத்து” – லண்டனில் தப்பிய பலே கோடீஸ்வரர்!

“நான் பலாத்காரம் செய்யல..அது ஒரு விபத்து” – லண்டனில் தப்பிய பலே கோடீஸ்வரர்!

544
0
SHARE
Ad

Accident rapeலண்டன் – லண்டன் வாழ் சவூதி கோடீஸ்வரர் எஹ்சான் அப்துல் அஜிஸ்(46) மீது 18 வயது இளம் பெண் தொடுத்த கற்பழிப்பு புகார், வெறும் 30 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், தான் அந்த இளம் பெண்ணை பலாத்காரம் செய்யவில்லை என்றும், நடந்தது ஒரு விபத்து என்றும் கூறிய அஜிஸ் தரப்பின் வாதம், ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளது லண்டனில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதின்ம வயது பெண் ஒருவரை, அஜிஸ் பலாத்காரம் செய்ததாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது. கேளிக்கை விடுதி ஒன்றில் அஜிஸ் தன்னை சந்தித்ததாகவும், அதன் பின்னர் தன்னை அவருடைய இல்லத்திற்கு அழைத்துச் சென்று மது போதையில் பலாத்காரம் செய்ததாகவும் அந்த பெண் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய சவுத்வார் கிரவுன் நீதிமன்றம், நேற்று அஜிசை நிரபராதி என்று கூறி விடுதலை செய்தது. தன் மீதான குற்றச்சாட்டிற்கு அஜிஸ் தரப்பு கூறியுள்ள விளக்கத்தில், “நான் வலுவற்று இருந்த போது அந்த பெண் மீது விழுந்தேன். அதைத்தவிர அந்த பெண்ணை நான் எதுவும் செய்யவில்லை. அந்த பெண் தான் என்னை பலவந்தப்படுத்தினாள்” என்று கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

டிஎன்ஏ பரிசோதனையில் அஜிஸ் தரப்பில் குற்றம் இருப்பது வெளிப்படையாக தெரிந்தநிலையிலும், பல்வேறு குளறுபடிகளினால் அஜிஸ் தப்பித்துள்ளதாகப் பேசப்படுகிறது.