Home Slider விமான நிலையத்தில் வைத்து அனிரூத்தை கைது செய்ய காவல்துறை முடிவு!

விமான நிலையத்தில் வைத்து அனிரூத்தை கைது செய்ய காவல்துறை முடிவு!

575
0
SHARE
Ad

simbu-anirudhசென்னை – டொராண்டோவில் இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு நாளை தமிழகம் திரும்பும் அனிரூத்தை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய காவல்துறை தயாராகி வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

பீப் பாடல் தொடர்பாக சிம்பு-அனிரூத் மீது காவல்துறை மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், இருவரும் விசாரணைக்கு, வரும் டிசம்பர் 19-ம் தேதி வர வேண்டும் என காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், கனடாவில் இருந்து நாளை (வியாழக்கிழமை) அவர் சென்னை திரும்பத் திட்டமிட்டுள்ள நிலையில், அவர் கைதாக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

#TamilSchoolmychoice

முன்னதாக அனிரூத், குறிப்பிட்ட அந்த பாடலுக்கு தான் இசை அமைக்கவே இல்லை என விளக்கம் அளித்து இருந்தார்.