Home Featured தொழில் நுட்பம் வியக்க வைக்கும் பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி!

வியக்க வைக்கும் பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி!

511
0
SHARE
Ad

Facebook1கோலாலம்பூர் – அனைவரும் இணைந்து இருக்க வேண்டும். அதற்கு இணையம் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது, என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு பேஸ்புக் செயல்படுகிறது. அந்த கொள்கையின் அடிப்படையில் தான் அந்நிறுவனம், புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

வாரம் ஒரு புதிய மேம்பாட்டினை பேஸ்புக் அறிமுகப்படுத்தினாலும், தற்போதய மேம்பாடு இணைய இணைப்புகள் குறைவாக இருக்கும் நாடுகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மேம்பாட்டின் படி, பேஸ்புக் பயனாளிகள் தங்களின் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்ட போதும் நண்பர்களின் கருத்துக்கு பதில் போடவும், பகிரவும் முடியும். அதாவது ஆஃப்லைனில் (Offline) இருக்கும் போதும் பேஸ்புக் வழக்கம் போலவே செயலப்படும்.

3ஜி சேவை இன்னமும் எட்டாத பகுதிகளும், இணைய இணைப்பு குறைவாக இருக்கும் இடங்களிலும் இந்த வசதி பெரும் உதவியாக இருக்கும் என்று பேஸ்புக் சார்பில் கூறப்பட்டுள்ளது.