புதுடெல்லி – இந்தியா வந்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இன்று இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
நேற்று இந்தியா வந்த சுந்தர் பிச்சை, தலைநகர் புதுடெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை ஸ்ரீராம் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடும் சுந்தர் பிச்சை, இரவு நடைபெறும் விருந்து ஒன்றில் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்.
இதற்கு முன்பு கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியை, சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.