Home Featured நாடு தேவமணி மஇகா தலைமையகத்திலேயே தாக்கப்பட்டது குறித்து கட்சியெங்கும் அதிர்ச்சி அலைகள்!

தேவமணி மஇகா தலைமையகத்திலேயே தாக்கப்பட்டது குறித்து கட்சியெங்கும் அதிர்ச்சி அலைகள்!

562
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று மஇகா தலைமையகத்தில் கட்சியின் தேசியத் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணியே தாக்கப்பட்டுள்ளது மஇகா வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

sk-devamany-jan17-300x202மஇகா தலைமையகக் கட்டிடத்தில் அதன் அலுவலகம் அமைந்துள்ள 6வது மாடியிலிருந்து இறங்கி வந்தபோது, கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் அவர் தாக்கப்பட்டார்.

பழனிவேல் தரப்பைப் பிரதிநிதிக்கும் டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன், ஏ.கே.இராமலிங்கம் ஆகியோர் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குழுவினர் நேற்று மஇகா தலைமையகப் பொறுப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த மஇகா தலைமையகம் வந்தனர்.

#TamilSchoolmychoice

காலை முதல் பிற்பகல் வரை நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மஇகா தலைமையகத்தின் சார்பில் தேசியத் துணைத் தலைவர் தேவமணி, தலைமைச் செயலாளர் அ.சக்திவேல், மத்திய செயலவை உறுப்பினர் சா.வேள்பாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுபட்டு, கட்சிக்கு வெளியில் இருக்கும் கிளைகளின் சார்பில் டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன், ஏ.கே.இராமலிங்கம் ஆகியோரும் மற்ற சில தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், மஇகா புக்கிட் பிந்தாங் தொகுதித் தலைவரும், மஇகாவின் முன்னாள் பொருளாளருமான டத்தோ ரமணன் ராமலிங்கம் தரப்பினருக்கு ஆதரவாக அவர்களுடன் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டதுதான்.

நாளை நடைபெறவிருக்கும் வேட்புமனுத் தாக்கலில் பங்கு பெறுவது குறித்தும், கட்சிக்கு வெளியே இருப்பது மொத்தம் எத்தனை கிளைகள் என்பது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

காவல் துறையில் புகார்

பேச்சு வார்த்தைகள் முடிந்தபின்னர் கீழே இறங்கியபோதுதான் தேவமணி தாக்கப்பட்டார்.

அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து தேவமணி உடனடியாக டாங் வாங்கி காவல் நிலையம் சென்று அங்கு புகார் அளித்தார்.

இதற்கிடையில் திட்டமிட்டபடி, நாளை சனிக்கிழமை, கட்சிக்கு வெளியில் நிற்கும் கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என மஇகா தலைமைச் செயலாளர் அ.சக்திவேல் அறிவித்துள்ளார்.