Home Featured தொழில் நுட்பம் இந்தியாவில் ஐபோன் 6 எஸ்-ன் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டது!

இந்தியாவில் ஐபோன் 6 எஸ்-ன் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டது!

925
0
SHARE
Ad

iphone 6sபுது டெல்லி – இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வெளியீடான ஐபோன் 6 எஸ் மற்றும் 6 எஸ் பிளசின் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டது. இந்த ஐபோன்கள் வெளியாகி, இரண்டு மாதங்களே ஆகி உள்ள நிலையில், 16 சதவீத விலை குறைப்பை ஆப்பிள் அறிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 16-ம் தேதி, இந்தியாவில் அறிமுகமான ஐபோன் 6 எஸ் மற்றும் 6 எஸ் பிளஸ் ஆரம்பத்தில், 62,000-92,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஹாங் காங் போன்ற நாடுகளை ஒப்பிடுகையில் 16,000 ரூபாய் வரை விலை அதிகம்.

ஆரம்பத்தில், ஐபோன் 6 எஸ் பெரிய அளவில் வரவேற்பு இருந்தாலும், மத்திய வர்க்கம் அதிகம் இருக்கும் இந்தியாவில் இந்த விலை அதிகபட்சமாகக் கருதப்பட்டது. இதன் காரணமாக விற்பனை குறையத் துவங்கியது. இதனை உணர்ந்த ஆப்பிள், தற்போது மற்ற நாடுகளை விட அதிகப்படியாக இருக்கும் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

தற்போதய விலை குறைப்பின் படி, ஐபோன் 6 எஸ் (16 ஜிபி) 62,000 ரூபாயில் இருந்து 52,000 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. இந்த விலை, இணைய வர்த்தக நிறுவனங்கள் மூலம் பெறுகையில், மேலும் குறைக்கப்படும் என்பது கூடுதல் தகவலாகும்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஐபோன் 5 எஸ்-ன் விலையும் பாதியாகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.