Home Featured கலையுலகம் சிம்பு விவகாரத்தில் தர்மம் வென்றதாம் – டிஆர் பேட்டி!

சிம்பு விவகாரத்தில் தர்மம் வென்றதாம் – டிஆர் பேட்டி!

691
0
SHARE
Ad

tr-rajendranசென்னை – ‘பீப்’ பாடல் விவகாரத்தில் சிம்பு கைதாகும் சூழல் இருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அவருக்கு முன் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தர்மம் வென்றதாகப் பேட்டி அளித்துள்ளார்.

அவரின் அந்தப் பேட்டியில், “என் மகனின் வாழ்க்கையில் திருப்பமான நாள் இன்று. அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத ‘பீப்’ பாடலை தேவையில்லாமல் பூதாகரமாக்கிவிட்டார்கள். ‘பீப்’ பாடல் எந்த திரைப்படத்திலும் இடம் பெறவில்லை.”

“யாரோ ஒருவர் அந்தப்பாடலை திருடி, சிம்புவுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்றனர். வேண்டாம் என ஒதுக்கிய பாடலை வலைதளத்தில் வெளியிட்டவர் மீது நடவடிக்கை தேவை. எங்கள் தரப்பில் உள்ள நியாயங்களை நீதிபதியிடம் எடுத்து உரைத்தோம். அதன்படி, இந்த வழக்கில் இன்று (நேற்று) எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்து. தர்மம் வென்றது. எங்களுக்கு ஆதரவு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. குறிப்பாக இறைவனுக்கு நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார்.