Home Featured இந்தியா பதன்கோட் தாக்குதல்: ஐக்கிய ஜிகாத் அமைப்பு பொறுப்பேற்பு! 

பதன்கோட் தாக்குதல்: ஐக்கிய ஜிகாத் அமைப்பு பொறுப்பேற்பு! 

710
0
SHARE
Ad

1pathankotபதன்கோட் – பஞ்சாப் பதன்கோட் விமானபடைத் தளத்தில், கடந்த மூன்று நாட்களாக நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு ஜம்மு – காஷ்மீரை மையமாகக் கொண்டு இயங்கும் ஐக்கிய ஜிகாத் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை, பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைத் தளத்திற்குள் இராணுவச் சீருடையில் நுழைந்த தீவிரவாதிகள் சிலர், அங்கு கடும் தாக்குதல் நடத்தினர். இராணுவ வீரர்களும் தீவிரவாதிகளுக்கு எதிராக பதிலடித் தாக்குதல் நடத்தியால் அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

padhankotஇதில் தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். 7 இராணுவ வீரர்களும் பலியாகினர். இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக ஐக்கிய ஜிகாத் அமைப்பு அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

“எந்தத் தாக்குதல் நடந்தாலும், பாகிஸ்தானை குற்றம்சாட்டும் பழக்கத்தை இந்தியா விடப் போவதில்லை. பாகிஸ்தானை குற்றம் சாட்டுவதால், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு என்றும் வெற்றி கிடைக்கப்போவதில்லை” என்று அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.