(பதாகைகளில் இடம்பெறாமல் போன ‘சூ பாஜி’ கதாப்பாத்திரம்)
இது குறித்து விளக்கமளித்துள்ள ஜிஎஸ்சி மூவீஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஹவ் சியு சாங், “மலேசியாவில் ஆரோன் வாக் மற்றும் ஹிம் லா என்ற இரு நடிகர்களும் நன்கு அறிமுகமானவர்கள். ஆரம்பத்தில் மங்கி கிங் அல்லது வைட் போன் டீமோன் கதாப்பாத்திரங்களைத் தான் பதாகைகளில் போடலாம் என்று எண்ணினோம். ஆனால் சீனாவின் திரைப்பட விநியோகஸ்தர் எங்களுக்கு சரியான நேரத்தில் பதாகைகளை அனுப்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ‘சூ பாஜி’ கதாப்பாத்திரத்தின் படத்தினை பதாகைகளில் இருந்து ஜிஎஸ்சி நீக்கியதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.