Home Featured தமிழ் நாடு திண்டுக்கல் அருகே வானில் மர்ம விமானங்கள்? – அச்சத்தில் மக்கள்!

திண்டுக்கல் அருகே வானில் மர்ம விமானங்கள்? – அச்சத்தில் மக்கள்!

554
0
SHARE
Ad

The-plane-flew-low-sensation_SECVPFதிண்டுக்கல் – திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் நேற்று பிற்பகலில் விமானம் ஒன்று மிகவும் தாழ்வாகப் பறந்ததால் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில மணிநேரங்களாக விமானம் சுற்றிக் கொண்டே இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். போர் விமானமா? அல்லது ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் சுற்றிக் கொண்டே இருந்ததா? என்பது தெரியவில்லை.

இதேபோன்று, கடந்த சில நாட்களுக்கு முன்பும், விமானம் ஒன்று மர்மமான முறையில் திண்டுக்கல் பகுதியில் சுற்றித்திருந்ததாகத் தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விமானப் போக்குவரத்துத் துறை, இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் அளிக்கவில்லை எனத் தெரிய வருகிறது.

#TamilSchoolmychoice