முன்னதாக, கோலாலம்பூர் மருத்துவமனையில் தனது வலது கை சிகிச்சைக்காக சென்ற நஜிப், அதன் பின்னர், தேசிய இருதய சிகிச்சை மையத்திற்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் முன்னாள் தகவல் பிரிவு அதிகாரி நசிர் சபாரை சந்தித்தார்.
பின்னர், அதே மருத்துவமனையில் மற்றொரு அறையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹாடியையும் சந்தித்ததாக தனது பேஸ்புக்கில் நஜிப் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, கடந்த ஆண்டு ஹாடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, இதே தேசிய இருதய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்திலும், நஜிப் அவரைப் பார்வையிட்டு ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.