Home Featured நாடு ஐஜேஎன் -ல் சிகிச்சை பெற்று வரும் ஹாடியை சந்தித்தார் நஜிப்!

ஐஜேஎன் -ல் சிகிச்சை பெற்று வரும் ஹாடியை சந்தித்தார் நஜிப்!

526
0
SHARE
Ad

hadi-najibகோலாலம்பூர் – தேசிய இருதய சிகிச்சை மையத்தில் (National Heart Institute – IJN) சிகிச்சை பெற்று வரும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று பார்வையிட்டு நலம் விசாரித்தார்.

முன்னதாக, கோலாலம்பூர் மருத்துவமனையில் தனது வலது கை சிகிச்சைக்காக சென்ற நஜிப், அதன் பின்னர், தேசிய இருதய சிகிச்சை மையத்திற்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் முன்னாள் தகவல் பிரிவு அதிகாரி நசிர் சபாரை சந்தித்தார்.

பின்னர், அதே மருத்துவமனையில் மற்றொரு அறையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹாடியையும் சந்தித்ததாக தனது பேஸ்புக்கில் நஜிப் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்பு, கடந்த ஆண்டு ஹாடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, இதே தேசிய இருதய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்திலும், நஜிப் அவரைப் பார்வையிட்டு ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.