Home Featured உலகம் கப்பல்களை விழுங்கும் பெர்முடா முக்கோண மர்மத்தை உடைத்த ரிக் வேதம்!

கப்பல்களை விழுங்கும் பெர்முடா முக்கோண மர்மத்தை உடைத்த ரிக் வேதம்!

962
0
SHARE
Ad

bermuda_triangle_mystery_rigvedaபுது டெல்லி – வட அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப் பகுதி என்றாலே ஆராய்ச்சியாளர்களுக்கும், கப்பல் மாலுமிகளுக்கும், ஏன் விமானப் போக்குவரத்துத்துறைக்கும் கூட பெரிய அளவில் கலக்கம் ஏற்படும். அது தான் பெர்முடா முக்கோண மர்மம் (Bermuda Triangle Mystery). இதனை பிசாசின் முக்கோணம் என்றும் அழைக்கின்றனர்.

குறிப்பிட்ட அந்தப் பகுதியில் இதுவரை பயணித்த விமானங்களும், கப்பல்களும் ஒரு தடயம் கூட இல்லாமல் மர்மமாக மாயமாயின. 1492-ல் அமெரிக்காவிற்கு கடல் வழிப் பயணம் மேற்கொள்கையில் கொலம்பஸ் கூட பெர்முடா முக்கோணத்தின் தாக்கத்தை பல மயில் தூரத்தில் உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 1909-ல் மீன் பிடி படகு ஒன்று அந்தப் பகுதியில் மாயமானது, 1945-ல் ப்ளோரிடாவில் இருந்து சென்ற அமெரிக்க விமானம் மாயமானது என பல திகில் வரலாற்றைக் கொண்டுள்ளது இந்த பெர்முடா முக்கோணம்.

அப்படி அங்கு என்ன தான் இருக்கிறது என இன்றும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. ஆனால் தீர்வு தான் கிடைத்த பாடில்லை. இதன் காரணமாக அந்தப் பகுதியில் அனைத்துவிதமான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, இந்தியாவின் மிக முக்கிய வேதங்களுள் ஒன்றான ரிக் வேதத்தில் (23000 வருடங்களுக்கு முன்பு எழுதியது), இந்த பெர்முடா முக்கோணம் பற்றிய மர்மம் விளக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

#TamilSchoolmychoice

earth_mars_formationஇந்தியாவின் வழக்கமான ஆன்மிக கருத்துக்கள் அதில் இருந்தாலும், அறிவியலும் புகுந்துள்ளதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கின்றனர். ரிக் வேதத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில், செவ்வாய் கிரகமானது பூமியில் இருந்து பிரிந்தது என்றும், அந்தப் பிரிவின் போது பூமியில் ஏற்பட்ட பிளவை, சரி செய்ய, கடவுள், இரும்பினை ஊற்றியதாகவும், முக்கோண வடிவில் உள்ள அந்தப் பிளவு நாளடைவில் காந்த சக்தி பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பிரிவு தான் பெர்முடா முக்கோணம் எனத் தெரிய வருகிறது. இதன் காரணமாகவே பூமியில் குறிப்பிட்ட ஒரு கோணத்தில் மட்டும் மாற்றம் இருப்பதாகவும் ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவீன அறிவியலால் விளக்க முடியாத மர்மம், ரிக் வேதத்தில் மட்டுமல்லாமல் அதர்வண வேதத்திலும் விளக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஆன்மிகவாதிகள் தெரிவித்துள்ளனர்.