Home Featured கலையுலகம் ஆஸ்கர் விருதுகளில் இனப்பாகுபாடு: விழாவைப் புறக்கணிக்கிறேன் – வில் ஸ்மித் அறிவிப்பு!

ஆஸ்கர் விருதுகளில் இனப்பாகுபாடு: விழாவைப் புறக்கணிக்கிறேன் – வில் ஸ்மித் அறிவிப்பு!

726
0
SHARE
Ad

willsmithநியூ யார்க் – ஆஸ்கர் விருதுகளில் இனப்பாகுபாடு இருப்பதால், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் விழாவைப் புறக்கணிப்பதாக ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித் பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட் ஸ்மித் மற்றும் இயக்குநர் ஸ்பைக் லீ ஆகியோர் ஆஸ்கர் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், ஸ்மித்தின் தற்போதய அறிவிப்பு உலக கவனத்தை ஈர்த்துள்ளது.

இது தொடர்பாக ஸ்மித் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “என் மனைவி ஆஸ்கர் நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக நட்பு ஊடகங்களில் அறிவித்த போது நான் வெளிநாட்டில் இருந்தேன். நான் அவள் வார்தைகளை கேட்ட பிறகு தட்டி எழுப்பப்பட்டேன். அந்தப் பெண்ணை மணந்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கான தெரிவுப் பட்டியலில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறுபான்மை இனத்தவர் இடம்பெறவில்லை. இது திட்டமிட்டே நடைபெறுகிறது”

“தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 20 நடிகர்களில் ஒருவர்கூட சிறுபான்மை இனத்தவர் இல்லை என்பதே இந்த புறக்கணிப்புக்கான காரணம். என் இனத்தவர் மத்தியில் எங்களுக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளோம். அப்படியிருந்தும் எங்களுக்கு இன்னமும்கூட சில பிரச்சினைகள் எழுகின்றன. அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது எங்கள் கடமை. அவ்வாறு தீர்வு காண முடியாவிட்டால் பிரச்சினை உருவாக நாங்களும் ஒரு காரணம் என்றே அர்த்தம்.”

#TamilSchoolmychoice

என் மனைவி கொடுத்துள்ள எதிர்ப்புக் குரல், எங்கள் குடும்பத்துக்கான குரல் மட்டுமல்ல. ஒட்டுமொத்த இனத்திற்கான குரல். அமெரிக்காவின் அடையாளமே அதன் பன்முகத்தன்மைதான். அந்த பன்முகத்தன்மை திரைத்துறையிலும் எதிரொலிக்க வேண்டும். ஆனால், ஹாலிவுட்டில் தவறு நடக்கிறது. ஒவ்வொரு படைப்பாளியிடமும் ஒரு திறமை இருக்கிறது. அழகியல் மறைந்து இருக்கிறது. ஆனால், இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் தெரிவுப் பட்டியலைப் பார்த்தால் ஏமாற்றமளிக்கிறது.”

“இந்தத் தெரிவுப் பட்டியல் ஆஸ்கர் அகாடமியைப் பிரதிபலிக்கிறது. ஆஸ்கர் அகாடமியின் நிலைப்பாடு ஒட்டுமொத்த ஹாலிவுட் திரைத்துறையின் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறது. ஹாலிவுட்டின் இந்தப் பார்வை, அனைத்துலக அரங்கில் அமெரிக்காவின் பார்வையாக கருதப்படும்.”

“பிரிவினைவாதம், இனவாதம், மத பேதம் நோக்கி அமெரிக்க திரைச்சமூகம் மெல்ல மெல்ல சரிந்து கொண்டிருக்கிறது. நான் மிகவும் நேசிக்கும் ஹாலிவுட்டில் இது தொடர நான் விரும்பவில்லை” என்று வில் ஸ்மித் உருக்கமாகக் கூறியுள்ளார்.

அண்மையில் வில் ஸ்மித் நடிப்பில் வெளிவந்த ‘கன்கஸன்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தெரிவுப் பட்டியலில் எந்த ஒரு பிரிவிலும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.