Home Featured கலையுலகம் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித் மலேசியா வருகை!

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித் மலேசியா வருகை!

711
0
SHARE
Ad

will smithகோலாலம்பூர் – நேற்று கோலாலம்பூரில் உள்ள பிரபல வணிக வளாகமான மிட் வேலி மெகாமாலில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித்தைக் காண முடிந்தது. அவரைக் கண்ட மலேசிய ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.

எனினும், மலேசியாவிற்கு அவர் வருகை புரிந்ததற்கான காரணம் இரகசியமாக வைக்கப்பட்டு வருகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மலேசியாவிற்கு வருகை புரிந்த வில் ஸ்மித், இங்குள்ள ஐபிலிக்ஸ் (iflix) என்ற பொழுதுபோக்கு சேவை நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் சந்திப்புகளை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

எனினும், ஐபிலிக்ஸ் சார்பில் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.