Home Featured நாடு ஜகார்த்தா தாக்குதலுக்கு முன் மலேசிய எண்ணிற்கு தீவிரவாதி அழைப்பு – காவல்துறை தகவல்!

ஜகார்த்தா தாக்குதலுக்கு முன் மலேசிய எண்ணிற்கு தீவிரவாதி அழைப்பு – காவல்துறை தகவல்!

633
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த ஜனவரி 14-ம் தேதி இந்தோனிசியாவின் ஜகார்த்தாவில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு முன், தீவிரவாதிகளில் ஒருவன், மலேசியாவிலுள்ள கைப்பேசி எண்ணிற்கு அழைத்துப் பேசியுள்ளதாக புக்கிட் அம்மான் சிறப்புப் பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ ஃபசி மொகமட் ஹாருன் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசிய காவல்துறையின் தடவியல் விசாரணையின் அடிப்படையில் இந்தத் தகவல் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோலாலம்பூரில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிரான அனைத்துலகக் கருத்தரங்கில் கலந்து கொண்ட ஃபசி இடையில், செய்தியாளர்களிடம் பேசுகையில், “தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும், ஜகார்த்தாவில் நடந்த தீவிரவாதத்  தாக்குதலில் இதுவரை மலேசியர்கள் யாரும் ஈடுபட்டதாக விசாரணையில் கண்டறியப்படவில்லை என்றும் ஃபசி தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் இயக்கம் மலேசியாவில் தன்னுடைய திட்டங்களை செயல்படுத்த, சிரியாவில் இருக்கும் மலேசியர்கள் மூலமாக தகவல் தொடர்பு பெற்றுவருகின்றது என காவல்துறை நம்புகின்றது என்றும் ஃபசி தெரிவித்துள்ளார்.

படம்: நன்றி (The Star)