Home Featured இந்தியா ரஜினிக்கு பத்மவிபூஷண் அறிவிக்கப்பட்டது தொடர்பான சர்ச்சை – மத்திய அமைச்சர் பதிலடி!

ரஜினிக்கு பத்மவிபூஷண் அறிவிக்கப்பட்டது தொடர்பான சர்ச்சை – மத்திய அமைச்சர் பதிலடி!

629
0
SHARE
Ad

rajini-prakash-jawadekarகோவை – ரஜினிக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டது ஊடகங்களில் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ரஜினிக்கு விருது அறிவிக்கப்பட்டது தேசிய அங்கீகாரம் அல்ல; அது அரசியல் அங்கீகாரம் என பொது நோக்கர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்நிலையில், வரும் 2-ம் தேதி, இந்தியப் பிரதமர் மோடி, கோவையில் பங்கேற்கும் விழா தொடர்பான ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக கோவை வந்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ரஜினிக்கு விருது அறிவிக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில், “நடிகர் ரஜினிகாந்திற்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ரஜினி சிறந்த நடிகர். தலைமுறை தலைமுறையாக அவரது நடிப்பை மக்கள் ரசித்து வருகிறார்கள். வருங்கால சந்ததியினரும் அவரது நடிப்பை ரசிக்கிறார்கள். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் ஆவார். அவருக்கு விருது கொடுப்பதால் அந்த விருதுக்குத்தான் பெருமை” என்று அவர் கூறியுள்ளார்.