இயக்குநர் துறையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டபோது, தொலைக்காட்சிப் பக்கம் திரும்பிய விசு, சன் தொலைக்காட்சியில் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியை நடத்தினார். அங்கு ஏற்பட்ட சில பிரச்சனைகளின் காரணமாக, தனது நிகழ்ச்சியை விசுவின் “மக்கள் அரங்கம்” என்ற பெயரில் ஜெயா தொலைக்காட்சியில் நடத்தி வந்தார்.
மலேசியாவிலும் இதே நிகழ்ச்சியை ஜெயா தொலைக்காட்சிக்காக ஒருமுறை நடத்தியிருக்கின்றார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இணைந்த அவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.
தனது பாஜக அரசியல் பிரவேசம் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய விசு, மக்கள் பணியாற்ற பாஜகவில் இணைந்ததாகவும், தமிழகத்தில் மக்கள் விருப்பமும் மாற்றத்தை பாஜகவால் மட்டுமே தர முடியும் என்று கூறியுள்ளார்.
விசுவின் திரைப்பட வரலாற்றில் ஏவிஎம் தயாரித்த அவரது “சம்சாரம் அது மின்சாரம்” திரைப்படம் அவரைப் புகழின் உச்சிக்கு கொண்டுச் சென்றது. வசூலில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படம், மத்திய அரசின் விருதுகளையும் பெற்றது.